சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: ஜாமீனில் வந்த தந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம், கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு சென்னைக்கு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது, அதில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகு றித்து புகார் எழுந்ததை அடுத்து, சிறப்பு விசாரணை குழு விசாரிக்க கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையடுத்து உன்னிகிருஷ்ணன் போற்றி, தந்திரி கண்டரரு ராஜீவரு உள்பட 12 பேரை சிறப்பு விசாரணை குழுவினர் கைது செய்தனர். இந்த வழக்கை சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் கைதான தந்திரி கண்டரரு ராஜீவரு, சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

இந்தநிலையில் கொச்சியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் தங்க கவசங்களை வெளியே எடுத்து செல்வதற்கு உடந்தையாக இருந்ததாகவும், அவர் தனக்கு கிடைத்த பணத்தை தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நிதி நிறுவன உரிமையாளர் ராஜுவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

Source link