திமுகவில் போட்டியிட சீட் கேட்டு கட்டபொம்மனின் 8-வது வாரிசு விருப்ப மனு

சென்னை,

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக களம் இறங்குபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த மாதம் 20-ந்தேதி முதல் பெறப்பட்டு வருகிறது. தற்போது அமைச்சர்களாக இருப்பவர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்து வருகிறார்கள்.

புதிதாக பலரும் மனுக்களை அளித்து வருகிறார்கள். தி.மு.க.வில் விருப்ப மனு நாளை மறுநாளுடன் நிறைவடைய உள்ளதால், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கூட்டம் அலைமோதியது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 8-வது வாரிசு என்று கூறி இளைய கட்டபொம்மன் என்பவர் கட்டபொம்மன் போன்று வேடமணிந்தவரை அழைத்து வந்து நேற்று 2 விருப்ப மனுவை அளித்தார்.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும், திருத்தணி தொகுதிக்கு தனது பெயரிலும் வழங்கினார்.

அமைச்சர்களின் வாரிசுகள் விருப்ப மனு அளித்து வரும் நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசை சேர்ந்தவரும் விருப்ப மனுவை அளித்துள்ளது, அண்ணா அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Source link