திரு.வி.க.நகர், ராயபுரம் மண்டலங்களில் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள்; பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமைச்சர் பி.கே. சேகர்பாபு

சென்னை

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், கொளத்தூர் சட்டமன்ற தொகுதி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-64, சீனிவாசா நகர் சென்னை தொடக்க பள்ளியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடம், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் சி.எம்.டி.ஏ. சார்பில் கட்டப்பட்டுள்ள கொளத்தூர் நவீன அங்காடி கட்டிடம், வார்டு-68, ஜவஹர் நகரில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு வரும் மகளிர் உடற்பயிற்சி கூடம், வார்டு-70, ரமணா நகர், கவுதமபுரத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்நோக்கு மைய கட்டிடத்தில் கட்டப்பட்டு வரும் நியாய விலை கடைகள் ஆகியவற்றின் இறுதிகட்ட பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, அமைச்சர் திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதி, திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-71க்கு உட்பட்ட புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை, ஆடுதொட்டி அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன நிதியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

Also Read
பா.ஜ.க. எப்போதும் கூட்டணி கட்சிகளை ஏமாற்றும்; நிதிஷ்குமார் முடிவு பற்றி காங்கிரஸ் கருத்து
திரு.வி.க.நகர், ராயபுரம் மண்டலங்களில் ரூ.2.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள்; பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் அமைச்சர் பி.கே. சேகர்பாபு

இந்த விளையாட்டு பூங்காவில் நடைபாதை, கழிப்பறை, பாதுகாவலர் அறை, கேஜிபோ, திறந்தவெளி உடற்பயிற்சி, சிறுவர்கள் விளையாடும் பகுதி, மின்விளக்கு வசதி, மின்மாற்றிகளை சுற்றிலும் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்கள் விளையாடுவதற்கு சாய்தள சறுக்கு விளையாட்டு, ஏற்ற விளையாட்டு, ஊஞ்சல், குடை ராட்டினம் உள்ளிட்ட உபகரணங்கள், Street Workout, Forearm Twirl, Chest Press, Shoulder Twirl, Cross Trainer, Core Twister, Leg Press, Pedaling Bicycle உள்ளிட்ட திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

பின்னர், எழும்பூர் சட்டமன்ற தொகுதி, ராயபுரம் மண்டலம், வார்டு-58, ராட்லர் தெருவில் மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மற்றும் மூலதன நிதியில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் 595 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் பயிற்சி கூடத்தினை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதில் உட்புற மற்றும் வெளிப்புற பயிற்சிக்கான கட்டமைப்புகள், பாதுகாவலர் அறை, அலுவலக அறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சிகளில், மேயர் ஆர்.பிரியா, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும உறுப்பினர் செயலர்/முதன்மை செயலாளர் கோ.பிரகாஷ், இ.ஆ.ப., முதன்மை செயல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி, இ.ஆ.ப., வட்டார துணை ஆணையாளர்கள் எச்.ஆர்.கௌஷிக், இ.ஆ.ப., (மத்தியம்), கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., (வடக்கு), மாவட்ட வருவாய் அலுவலர் (சி.எம்.டி.ஏ.) மு. இந்துமதி, கண்காணிப்பு பொறியாளர் ராஜன் பாபு, நியமன குழு உறுப்பினர் சொ.வேலு, மாமன்ற உறுப்பினர்கள் எ.நாகராஜன், ராஜேஸ்வரி ஶ்ரீதர், மண்டல அலுவலர்கள் ஜி.சொக்கலிங்கம், சி.விஜயபாபு மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Source link