சென்னை,
மநீம தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;
”2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் தலைவர், கமல் ஹாசன் அவர்களின் தலைமையில் 06-03-2026 (வெள்ளிக்கிழமை), மாலை 3 மணிக்கு நடைபெற இருக்கிறது.
சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நமது கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
