மும்பை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அபிஷேக் சர்மா ஏமாற்றமளித்தார். அவர் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து சாம்சனும், இஷான் கிஷனும் இணைந்து அதிரடி காட்டினர்.
இஷான் கிஷன் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன், சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு, ஆட்டமிழந்தார். அவர் அவர் 42 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார். சிவம் துபேவும் அதிரடியுடன் தனது பங்குக்கு 43 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
இறுதியில் திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்ட, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் வில் ஜேக்ஸ், அடில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.
