பிரான்ஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச்சூழல் குறித்து மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

மேற்காசியாவில் நடந்துவரும் போர் தொடர்பாக இமானுவேல் மேக்ரானுடன் ஆலோசித்தேன். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்து விவாதித்தோம். அமைதி, ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என அதில் பதிவிட்டுள்ளார்.

Source link