நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி – அதிர்ச்சி சம்பவம்

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஜெல்திம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ் (38 வயது). சென்னை பூ மார்க்கெட் தொழிலாளி. இவரது மனைவி நிவேதிதா (28 வயது). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பாக்கியராஜ் சென்னையில் இருந்து அவ்வப்போது ஊருக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

Also Read
பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ.15 ஆயிரமாக உயர்வு – அரசாணை வெளியீடு
நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி - அதிர்ச்சி சம்பவம்

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மனைவியின் நடத்தை மீது பாக்கியராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக நிவேதிதா கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் கோணம்பட்டியில் இருக்கும் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதைத்தொடர்ந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை சமாதானப்படுத்தினார்கள்.

Also Read
தனியார் பள்ளி வளாகங்களில் அரசியல், வகுப்புவாதம் ரீதியிலான கூட்டங்கள் நடத்தக்கூடாது – அரசிதழ் வெளியீடு
நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி - அதிர்ச்சி சம்பவம்

பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மீண்டும் கணவர் வீட்டிற்கு நிவேதிதாவை பெற்றோர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பாக்கியராஜ் கத்தியால் நிவேதிதாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் நிவேதிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

Also Read
சினிமாவுக்கு எல்லைகள் என்பதே கிடையாது – நடிகை மாளவிகா மோகனன்
நடத்தையில் சந்தேகம்: மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி - அதிர்ச்சி சம்பவம்

இதையடுத்து பாக்கியராஜ் பஞ்சப்பள்ளி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதுதொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், பாக்கியராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source link