26 கட்சிகளுடன் மெகா கூட்டணி: தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் பங்கீடு உத்தேச பட்டியல்

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றிலேயே எந்தத் தேர்தலிலும் இல்லாத வகையில் மெகா கூட்டணியை ஆளுங்கட்சியான தி.மு.க. அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் 26 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

அதாவது, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் நீதி மய்யம், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்.டி.பி.ஐ., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆம் ஆத்மி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, சமத்துவ மக்கள் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், கொங்கு இளைஞர் பேரவை, வல்லரசு பார்வர்டு பிளாக், ஆதி தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் கட்சி, புதிய திராவிடர் கழகம், தமிழர் தேசம் கட்சி, அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகம், திராவிட தமிழர் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள 26 கட்சிகளில், 20 கட்சிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

அந்த வகையில், தி.மு.க. 152 தொகுதிகளில் போட்டியிடுவதுடன் கூட்டணி கட்சிகளுக்கு 82 தொகுதிகளை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது. இதில், பல கட்சிகள் தி.மு.க.வின் சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுமாம்.

தி.மு.க. – 152

காங்கிரஸ் – 28

தே.மு.தி.க. – 10

வி.சி.க. – 8

மா.கம்யூ – 6

இ.கம்யூ – 6

மதிமுக – 6

தமிழக வாழ்வுரிமை கட்சி – 2

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி – 2

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 2

மனிதநேய மக்கள் கட்சி – 2

மனிதநேய ஜனநாயக கட்சி – 1

எஸ்.டி.பி.ஐ. – 1

முக்குலத்தோர் புலிப்படை – 1

கொங்கு இளைஞர் பேரவை – 1

தமிழர் தேசம் கட்சி – 1

அனைத்திந்திய பார்வர்ட் பிளாக் – 1

முக்குலத்தோர் முன்னேற்ற கழகம் – 1

ஆதி தமிழர் பேரவை – 1

மக்கள் விடுதலை கட்சி – 1

கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் – 1

Source link