டி20 உலகக் கோப்பை: இலங்கை அணியின் ஆலோசகராக மலிங்கா நியமனம்

கொழும்பு ,

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது.
மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக முன்னாள் வீரர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி 8-ம் தேதி அயர்லாந்துடனும், 12-ம் தேதி ஓமனுடனும், 16-ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும், 19-ம் தேதி ஜிம்பாப்வே உடனும் மோதுகிறது.

Source link