அக்சர் படேலுக்கு கவாஸ்கர் பாராட்டு

மும்பை,

2026 டி20 உலகக் கோப்பை 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் குவித்தது. 254 ரன்கள் என்ற கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 246 ரன்கள் மட்டுமே எடுத்ததால் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது, இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் அடித்த பந்தை அக்சர் படேல் அபாரமாக கேட்ச் பிடித்து ஆட்டத்தை மாற்றினார்.

இந்த நிலையில் அக்சர் படேலுக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

‘உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதி யில் ஹாரி புரூக் தூக்கியடித்த பந்தை அக்ஷர் பட்டேல் பிடித்த விதம் நம்ப முடியாத அளவுக்கு பிரமாதமாக இருந்தது. தான் நின்ற இடத்தில் இருந்து கிட்டத்தட்ட 24 மீட்டர் தூரம் பின்னோக்கி ஓடிச்சென்று பிடித்தார். புரூக் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை விட்டால் சிக்கல் தான். அக்ஷர் பணியை சரியாக செய்தார்’ என பாராட்டியுள்ளார்.

Source link