நைஜீரியா: பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேரை கடத்தி சென்ற பயங்கரவாதிகள்

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவ்வப்போது கிராமத்தினர், பள்ளிக்குழந்தைகளை கடத்தி செல்லும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நைஜீரியாவின் பொர்னோ மாகாணம் கொஷி கிராமத்திற்குள் நுழைந்த போகோஹராம் பயங்கரவாதிகள் அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 300 பேரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று தீவிர தேடுதல் பணியில் ஈடுபடு வருகின்றனர்.

Source link