அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு – அரசாணை வெளியீடு

சென்னை,

அரசு பள்ளிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.500 முதல் ரூ.1,500 வரை ஊதியத்தை அதிகரித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் 30,000-க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் பயன்பெறுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக ரேஷன் கடை ஊழியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் ஆகியோருக்கும் ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Source link