நேபாள நாடாளுமன்ற தேர்தல்: பிரதமராகிறார் பாலேந்திர ஷா…!

காத்மண்டு,

இந்தியாவின் அண்டை நாடு நேபாளம். இந்நாட்டின் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தை ஈடுபட்டனர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் சென்றது.

இதையடுத்து நேபாள பிரதமர் பதவியை கே.பி. சர்மா ஒலி ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து நாட்டை நிர்வகிக்க கடந்த செப்டம்பர் மாதம் இடைக்கால பிரதமராக சுஷிலா கார்கி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த சில மாதங்களாக நேபாளத்தின் இடைக்கால பிரதமராக செயல்பட்டு வந்தார். இதனை தொடர்ந்து புதிய அரசை தேர்ந்தெடுக்க நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது.

தேர்தலில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி, நேபாள காங்கிரஸ், நேபாள கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. ராஷ்டிரிய சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராப் பாடகர் பாலேந்திர ஷா களமிறங்கினார். கே.பி.சர்மா ஒலிக்கு அரசுக்கு எதிரான இளைஞர்கள் போராட்டத்தில் ராஷ்டிரிய சுதந்திர கட்சி முக்கிய பங்காற்றது.

நேபாள நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் மொத்தம் 275 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 165 பேர் நேரடியாகவும், 110 பேர் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையிலும் தேர்வு செய்யப்படுவர்.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், ராஷ்டிரிய சுதந்திரா கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் தேர்தலில் வெற்றிபெற்று பாலேந்திர ஷா நேபாளத்தின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். வாக்கு எண்ணிக்கை இறுதி அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link