பராமரிப்பு பணி: சென்னையில் நாளை மறுநாள் மின்தடை

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னையில் நாளை மறுநாள் (5.2.2026, வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருமுடிவாக்கம்: சோமங்கலம், மேலத்தூர், டி.சி.நகர், சக்திநகர், புதுபேடு மேடு, புதுபேடு பள்ளம், சி.ஐ.டி. கல்லூரி, நடுவீரப்பட்டு காந்திநகர், நடுவீரப்பட்டு ராம்ஜிநகர், தாம்பரம் பிரதான சாலை, பூந்தண்டலம்.

ராஜகீழ்பாக்கம்: வேளச்சேரி பிரதான சாலை, மேத்தாநகர் பிரதான சாலை, மகாலட்சுமிநகர் மெயின் சாலை, மாருதிநகர், கோமதிநகர், ஐயப்பாநகர், விவேகந்தன் தெரு, ராசுகி தெரு, வேணுகோபால் தெரு, அண்ணா தெரு, பாரதியார் தெரு, திருமகள்நகர், கார்த்திக் அவென்யூ, பிரதீப் அவென்யூ, குருநாதர் தெரு, ரங்கா காலனி, வஊசி தெரு, நேதாஜி தெரு, பவானந்தியர் தெரு, மாரி அம்மன் கோவில் தெரு, சாம் அவென்யூ, செம்பாக்கம் பிரதான சாலை, மகாசக்தி காலனி, ஐ.ஓ.பி.காலனி, கேம்ப் சாலை, கர்ணம் தெரு, கண்ணன்நகர், அவ்வைநகர், பாரதிநகர், மாடம்பாக்கம் பிரதான சாலை, பொன்னியம்மன் கோவில் தெரு, சின்மயி காலனி, கம்பர் தெரு, மாணிக்கவாசகர் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கனகராஜ் தெரு, அம்பேத்கர் தெரு, அண்ணா தெரு, ராஜீவ்காந்திநகர், கலைஞர் கருணாநிதி நகர், துர்கா காலனி, வெங்கட்ரமணன்நகர், சிவகாமிநகர், முத்தமிழ்நகர், சிட்லப்பாக்கம், மணவாளநகர், ஏரிக்கரை தெரு.

திருவேற்காடு: சன்னதி தெரு, திருவேங்கடநகர், சின்ன கோளடி, கிருஷ்ணாநகர் ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link