நான் முதல்வன் திட்டம்: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

சென்னை,

இந்தியாவில் சிவில் சர்வீஸ் எனப்படும் குடிமைப் பணிக்கான காலியிடங்கள் யுபிஎஸ்சி தேர்வுகள் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் நாடு முழுவதும் மொத்தமாக 958 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்த தேர்வில் இறுதித்தேர்வான நேர்காணல்களுக்கு மட்டும் தமிழ்நாட்டில் இருந்து 140 பேர் பங்கேற்றிருந்தனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து 60 பேர் மொத்தமாக யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதில் 10 ஆண்டுகளுக்கு பின் டாப் 10 இடங்களில் 2 தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர். மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த ராஜேஸ்வரி 2வது இடத்தையும், ராஜா மொகைதீன் 7வது இடத்தையும் பிடித்து அசத்தி உள்ளனர்.

இதனிடையே தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றிபெற்ற 60 பேரில் 56 பேர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்களை வெளியிட்டு, சிகரம் தொட்ட 56 நான் முதல்வன் – தமிழ்நாடு அரசின் குடிமைப்பணி பயிற்சி மைய மாணவர்கள் என்றும், ஸ்டாலின் அரசின் மற்றும் ஒரு சாதனை என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Source link