சென்னை,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த நிலையில், இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் நாளை மோத உள்ளன. அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை நேரலையில் காண மெரினா கடற்கரையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
5 மணி முதல் 7 மணி வரை நாட்டுப்புற பாடல், பெரிய மேளம், மல்லர் கம்பம், நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதன் பின்னர், 7 மணிக்கு இறுதிப்போட்டி நேரலை செய்யப்பட உள்ளது.
