ஈரானும், இஸ்ரேலும் எங்கள் பட டைட்டில் போல் ஒன்று சேர வேண்டும் – “முஸ்தபா முஸ்தபா” பட விழாவில் சதீஷ் பேச்சு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டாக இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த இரு நாடு மோதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல உயர் இராணுவ மற்றும் அரசியல் பிரமுகர்கள் இறந்துள்ளனர். இந்த போரால், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் போக்கு முடிவுக்கு வர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ். இவர் தற்போது சுரேஷ் ரவியுடன் இணைந்து முஸ்தபா முஸ்தபா என்ற படத்தில் நடித்துள்ளார். பிரவீன் சரவணன் இயக்கிய இந்த படத்தில் மோனிகா சின்னகோட்லா, மானசா சவுத்ரி, கருணாகரன், புகழ், பாவெல் நவகீதன், ஐஸ்வர்யா தத்தா, லிவிங்ஸ்டன், சாம்ஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார். ‘முஸ்தபா முஸ்தபா’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், முஸ்தபா முஸ்தபா பட விழாவில் பேசிய நடிகர் சதீஷ், “முஸ்தபா முஸ்தபா என்ற டைட்டில் மாதிரி ஈரானும் இஸ்ரேலும் ‘முஸ்தபா முஸ்தபா’ பாடல் பாடி ஒன்று சேரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்” என்று தெரிவித்தார்.

Source link