டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணியில் அதிக ரன் குவித்த வீராங்கனையாக பெர்ரி சாதனை

பெர்த்

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், இந்தியாவுக்கு எதிரான போட்டியின் 2-வது நாளில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான எல்லைஸ் பெர்ரி (வயது 35) டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன் குவித்த ஆஸ்திரேலியா அளவிலான வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

போட்டியில் 43-வது ஓவரில் ஒரு ரன் ஓடி எடுத்தபோது ஆயிரன் ரன்களை கடந்ததுடன், காரென் ரோல்டன்னுக்கு (1,002 ரன்கள்) அடுத்து அதிக ரன்கள் எடுத்த 2-வது வீராங்கனையானார்.

Also Read
உலக நாடுகளின் தலைநகரங்களுடன் டெல்லி போட்டியிட வேண்டும்: புதிய கவர்னர் பேச்சு

டெஸ்ட் கிரிக்கெட்:  ஆஸ்திரேலிய அணியில் அதிக ரன் குவித்த வீராங்கனையாக பெர்ரி சாதனை

எனினும், சிறிது நேரத்தில் ரோல்டனை அவர் இதே போட்டியில் முந்தினார். இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவின் பந்து வீச்சில் பவுண்டரி அடித்து 1,006 ரன்களுடன் முதல் இடம் பிடித்த அவர், அதன்பின்னர் தீப்தியிடம் விக்கெட்டை இழந்து விட்டு 76 ரன்களுடன் (10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர்) வெளியேறினார்.

இந்தியாவுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான அன்னாபெல் சதர்லேண்ட் உடன் சேர்ந்து, 4-வது விக்கெட்டுக்கு 128 ரன்களை எடுத்த பெர்ரி, அணி அதிக ஸ்கோர் செய்ய உதவினார்.

Source link