விசுவாவசு வருடம் மாசி மாதம் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
நட்சத்திரம்: இன்று பிற்பகல் 2.19 வரை சுவாதி பின்பு விசாகம்
திதி: இன்று இரவு 10.01 வரை பஞ்சமி பின்பு சஷ்டி
யோகம்: சித்த, மரண யோகம்
நல்ல நேரம்: காலை 7.30 – 8.30, மாலை 1.30 – 2.30
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: காலை 12.00 – 1.30
குளிகை: காலை 3.00 – 4.30
கௌரி நல்ல நேரம்: காலை 10.30 – 11.30, மாலை 1.30 – 2.30
சூலம்: மேற்கு
சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி, ரேவதி
மேஷம்
இன்று உங்களுக்கு மன வலிமை அதிகரிக்கும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவர். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ஆவேசமாக பேச வேண்டாம். உங்களை தயார்படுத்திக் கொள்வது நல்லது. தலைவலி வந்து போகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
ரிஷபம்
வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். குடும்பத் தலைவிகள் அத்தியாவசிய பொருள்களை வாங்குவர். பண சேமிப்பை அதிகரிப்பர். அரசு டென்டர் போன்றவைகளில் வெற்றி நிச்சயம். கலைஞர்களுக்கு வரவேண்டிய மீதித் தொகை வந்து சேரும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
மிதுனம்
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புகழ், கௌரவம் உயரும். மருந்து வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். புதிய வாகனம் வாங்கிவிடும் யோகம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
கடகம்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை குறையும். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக கமிஷன் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களுக்கு அதிக ஆர்டர்கள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமைக்கு குறைவில்லை. பணவரவு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
சிம்மம்
வியாபாரிகள் விற்பனையை அதிகரிக்க புதிய திட்டங்களை அதிகரிப்பர். உத்யோகத்தில் வேலை நெருக்கடி கூடும். மகளிரின் எண்ணங்கள் நிறைவேறும். தம்பதிகளிடையே வாக்குவாதம் நீங்கி சமரசமாவர். காதல் கண்சிமிட்டும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். உடல் உழைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
கன்னி
ஓட்டல் மற்றும் மளிகைக் கடை வைத்திருப்பவர்கள் நல்ல லாபத்தினை பார்ப்பர். தம்பதிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வர். வியாபாரிகள் உயர்வினை பெறுவர். சமூக ஆர்வலர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம். பெண்கள் வீட்டை அழகுபடுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
துலாம்
உத்யோகத்தில் வேலைப்பளு கூடும். ஆனாலும், அதனை திறமையாக முடித்துக் காட்டி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு கூடுதல் அலைச்சல் உண்டு. மாணவர்கள் நன்கு படிப்பர். தேர்வில் அதிக மதிப்பெண்களை பெறுவர். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
விருச்சிகம்
குடும்பத்தில் தம்பதிகள் சேர்ந்து முடிவெடுப்பர். குடும்பத் தலைவிகளுக்கு நல்ல வேலையாட்கள் அமைவர். அரசு தொடர்பான புதிய ஏஜென்சி எடுப்பீர்கள். விவசாயிகளின் பொருட்களுக்கு விலை ஏற்றம் உண்டு. இடுப்புகளில் வலி வந்து போகும். வேலையில் தங்கள் மனைவியின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா
தனுசு
பெண்களுக்கு திருமணம் செட்டாகும். வியாபாரிகளின் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிநாடு பயணம் செல்ல விசா கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வது நல்லது. வீட்டில் வேலையாட்கள் தங்கள் சொல்படி நடப்பர். மாணவர்கள் மேல் படிப்பிற்கான திட்டங்களை தீட்டுவர்.
அதிர்ஷ்ட நிறம்: பொன்னிறம்
மகரம்
தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பர். குடும்பத்தில் எதிர்பார்த்த நற்செய்தி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தங்கள் மகள் அயல்நாடு செல்வார். வாங்கிய கடனை வட்டியுடன் அடைத்து விடுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு இட மாற்றம் உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
கும்பம்
உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். விடுமுறை எடுப்பது மிகவும் கடினமாக இருக்கும். வியாபாரத்தில் வெளிநாட்டில் உள்ளவர்களின் பங்களிப்பு அதிகரிக்கும். கடன் அடைத்து இன்புறுவீர்கள். கணவனிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. மாணவர்களுக்கு ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை
மீனம்
இன்று சந்திராஷ்டமம் என்பதால் இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. காரணம் இன்று பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
