டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 200 பேருக்கு குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு குடியுரிமை சான்றிதழை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,
சி.ஏ.ஏ. எனும் குடியுரிமை திருத்த சட்டத்தை பா.ஜனதா அரசு கொண்டு வந்தபோது காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இருந்தாலும் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட இந்து அகதிகளுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் சட்டவிரோதமாக குடியே றிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பா.ஜனதா அரசால் வெளியேற்றப்பட் டனர். அவர்களை பாதுகாப்பதில் காங்கிரஸ் தனது முழு சக்தியையும் செலவிட்டது. வருகிற தேர்தலில் தமிழகம், மேற்கு வங்காளத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். 2027-ம் ஆண்டில் உத்தரகாண்டில் 3-வது முறையாக பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதன்மூலம் தேசிய ஜன நாயக கூட்டணியின் வெற்றிப்பயணம் தொடரும். கேதார்நாத் முதல் கன்னி யாகுமரி வரை நாட்டில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் மத்திய அரசு வெளியேற்றும்.
இவ்வாறு அவர் பேசினார்.
