மும்பை,
டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் இறுதிப்போட்டி இன்று ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணி் மோத உள்ளதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
இன்றைய இறுதிப்போட்டியை காண ரசிகர்கள் பெருமளவில் ஆமதாபாத் நோக்கி திரண்டுள்ளனர். இதற்காக டெல்லி மற்றும் மும்பை நகரங்களிலிருந்து ஆமதாபாத் நோக்கி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
மூன்றாவது முறையாக இந்திய அணி டி20 உலகக் கோப்பையை கைப்பற்றுமா? என்ற எதிர்பார்ப்புடன் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தேசியக் கொடிகளை ஏந்தி உற்சாகமாக ஆமதாபாத் நோக்கி பயணம் செய்து வருகின்றனர்.
மேலும், அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் பலரும் இந்த போட்டியை நேரில் காண உள்ளனர். இதையடுத்து ஆமதாபாத் நகரிலும், குறிப்பாக நரேந்திர மோடி ஸ்டேடியம் சுற்றுப்புறங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
