மூத்த பத்திரிகையாளர் பிடிஐ இராமசாமி மறைவு – அன்புமணி இரங்கல்

சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையாவது:-

தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் பிடிஐ இராமசாமி உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

பிடிஐ செய்தி நிறுவனத்தின் தலைமை செய்தியாளராகவும், மண்டல மேலாளராகவும் பணியாற்றிய இராமசாமி தமிழ்நாட்டு அரசியலை கிழக்கும், மேற்குமாக, வடக்கும், தெற்குமாக நன்றாக அறிந்திருந்தவர். தமிழ்நாட்டில் நடைபெற்ற பல அரசியல் மாற்றங்கள், கூட்டணி மாற்றங்களுக்கு காரணமாக இருந்தவர். மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோர், மறைந்த காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார், மருத்துவர் அய்யா உள்ளிட்டோருடன் நெருங்கி பழகியவர். எனக்கு நன்றாக அறிமுகமானவர். எனது நலனில் அக்கறை கொண்டவர்.

மூத்த பத்திரிகையாளர் பி.டி.ஐ இராமசாமி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், இதழியல் துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link