“உறியடி” விஜய்குமாரின் “அறிவு” படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட சூர்யா

‘உறியடி’ திரைப்படம் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் கவனிக்கப்பட்டவர் விஜய் குமார். தொடர்ந்து, ‘உறியடி 2’ மூலம் நல்ல நடிகர் என்கிற பெயரையும் பெற்றார்.சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரை போற்று’ படத்திற்கு இவர் வசனம் எழுதியிருந்தார். சில ஆண்டுகள் கழித்து ‘பைட் கிளப்’, ‘எலக்சன்’ திரைப்படங்கள் மூலம் ஆக்சன் நாயகனார்.

இந்த நிலையில், சத்யசிவா இயக்கத்தில் புதிய திரைப்படமொன்றில் விஜய் குமார் நடித்து வருகிறார். மகளிர் நாளை முன்னிட்டு இப்படத்திற்கு, ‘அறிவு’ என பெயரிட்டுள்ளதாக போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார்.

பெண்களின் உரிமைகள், சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பெண்களின் வலிமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால், ‘அறிவு’ திரைப்படம் ஒரு முக்கியமான சமூகச் செய்தியை எடுத்துரைக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Source link