தமிழகத்தில் பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பில்லாத சூழல் – டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

Also Read
திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய கூட்டம்; 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
கோப்புப்படம்

உலகமே மகளிர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில் நாமக்கல்லில் ஏழு வயது சிறுமிக்கு நடந்தேறியிருக்கும் இந்த கொடுமையான நிகழ்வு தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தமிழகத்தில் பெண்களுக்கு வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் என எங்குமே பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கிவிட்டு, பெண்ணுரிமை பேசுவதும், பெண் இனத்தின் காவலர் போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதும் வெட்கக் கேடானது.

Also Read
புலியைப் பார்த்து பூனை கோடுபோட்ட கதை – விஜயை விமர்சித்த திருமாவளவன்
கோப்புப்படம்

எனவே, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சிறுமிக்கு உரிய சிகிச்சை வழங்குவதோடு, இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்ட குரூர மனம் கொண்டவன் மீது எடுக்கும் நடவடிக்கை இனி இதுபோன்று எவரும் சிந்திக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும் என காவல்துறையையும் தமிழக அரசையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link