ஆக்சன் படங்களில் நடிக்க ஆசை – நடிகை சிவாத்மிகா ராஜசேகர்

‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் மூலம் ரசிகர்களை ஈர்த்த டாக்டர் ராஜசேகர் – ஜீவிதாவின் இளைய மகள் சிவாத்மிகாவும் நடிகை ஆவார். இவர் கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘தொரசானி’ என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார்.

Also Read
கடன் தொல்லையால் வளர்க்க முடியவில்லை… 3 குழந்தைகளை ஏரியில் தள்ளி கொலை செய்த தந்தை – அதிர்ச்சி சம்பவம்
கோப்புப்படம்

தமிழில் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’, ‘நித்தம் ஒரு வானம்’, ‘பாம்’ உள்ளிட்ட படங்களில் சிவாத்மிகா நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஆரோமலே’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Also Read
15 வயது சிறுமியை தாக்கிய ‘இன்ஸ்டாகிராம்’ பிரபலம் கைது
கோப்புப்படம்

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவாத்மிகாவிடம், என்ன மாதிரியான கதைகளில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “யதார்த்தமான கதைகளில் நடித்துவிட்டேன். எனக்கு ஆக்சன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. எனது தந்தையை போல ஆக்சனில் கலக்க விரும்புகிறேன். அதேவேளை காதல் நிரம்பி வழியும் படங்களிலும் நடிக்க துடிக்கிறேன். நல்ல கதைகள் அமையும் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

Also Read
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் – பக்தர்கள் ‘செல்பி’ எடுக்க சூழ்ந்ததால் பரபரப்பு
கோப்புப்படம்

Source link