ஐதராபாத்,
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் மகளிர் ஹாக்கி உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில், இந்திய மகளிர் அணி தனது முதல் ஆட்டத்தில் உருகுவேவை அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபாரமாக தொடங்கியுள்ளது.
இந்திய அணிக்காக சுனெலிதா டோப்போ (21’), இஷிகா (40’), லால்ரெம்சியாமி (49’) மற்றும் ருதுஜா தாதாசோ பிசால் (58’) ஆகியோர் கோல்கள் அடித்தனர்.
இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் இன்று (மார்ச் 9, 2026) ஸ்காட்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஐதராபாத்தில் உள்ள ஜி.எம்.சி பாலயோகி ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.
பெண்கள் உலகக் கோப்பை ஹாக்கி தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டி ஐதராபாத்தில் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த தகுதி சுற்றில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
‘ஏ’ பிரிவு:
இங்கிலாந்து, தென்கொரியா, இத்தாலி, ஆஸ்திரியா
‘பி’ பிரிவு:
இந்தியா, ஸ்காட்லாந்து, உருகுவே,வேல்ஸ்
இந்தத் தொடரில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஆகஸ்ட் மாதம் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்குத் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
