திருவள்ளூர்: மின் கசிவால் வீட்டில் தீ விபத்து – மாணவன் உயிரிழப்பு

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ஓரம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் ஸ்ரீனிவாசன் (வயது 15). இந்நிலையில், முனுசாமியின் குடிசை வீடு மின்கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவன் ஸ்ரீனிவாசன் தீயில் சிக்கினான்.

இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் குடிசை எரிந்து சிறுவனின் மீது விழுந்தது. இதனால் தீயில் சிக்கிய சிறுவன் உடல் கருகி துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான்.

15 வயதி சிறுவன் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link