படம் ரூ.200 கோடி வசூல்….ஆனால் ஹீரோயினுக்கு சம்பளம் ரூ.11 – அதிர்ச்சி தகவல்

சென்னை,

பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயின்களின் சம்பளமே அதிகமாக செலவாகிறது என்ற விவாதம் சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக, ஒரு ஹீரோயின் வெறும் ரூ.11 சம்பளத்தில் நடித்த படம் ஒன்று ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

2013 ஆம் ஆண்டு வெளியான ’பாக் மில்கா பாக்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த படத்தை இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மேஹ்ரா இயக்கினார். இதில் நடிகர் பர்ஹான் அக்தர் மில்கா சிங் கதாபாத்திரத்தில் நடித்தார். சுமார் ரூ.41 கோடி செலவில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் ரூ.210 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

Also Read
’ஜனநாயகன்’ பட சென்சார் – தொடரும் சிக்கல்
படம் ரூ.200 கோடி வசூல்....ஆனால் ஹீரோயினுக்கு சம்பளம் ரூ.11 - அதிர்ச்சி தகவல்

இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை சோனம் கபூர் நடித்திருந்தார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இந்த படத்திற்காக அவர் வெறும் ரூ.11 மட்டும் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் பல இந்தி திரைப்படங்களில் நடித்த சோனம் கபூர், பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மில்கா சிங்கின் வாழ்க்கைக் கதையை உலகுக்குச் சொல்லும் இத்தகைய முக்கியமான மற்றும் உத்வேகம் தரும் திரைப்படத்தில் தானும் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மில்கா சிங் மீதான மரியாதையாலும் இந்தப் பணத்தை சோனம் கபூர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதேபோன்று, மில்கா சிங் தனது கதையைத் திரைப்படமாக்க வெறும் ரூ. 1 மட்டுமே உரிமத் தொகையாக இயக்குநரிடம் பெற்றதாக கூறப்படுகிறது.

Source link