திருச்சி,
திருச்சியில் திமுகவின் 12-வது மாநில மாநாட்டில் முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: திரும்பும் திசையெல்லாம் அண்ணாவின் தம்பிகள்.: திமுக்வின் பெரும் சேனை திரண்டுள்ளது. சேனையின் தலைமை தொண்டன் நான். 10 லட்சம் பேர் திரண்டுள்ள பிரமாண்ட மாநாடாக இது நடைபெற்று வருகிறது. தமிழகமே திருச்சியில் திரண்டுள்ளது. உங்கள் உற்சாகம் என் வயதை குறைத்துள்ளது. என் இளமைக்கு காரணம் தொண்டர்கள் அன்புதான்.
நேற்று இன்று தொடங்கிய அன்பல்ல இது. 72 ஆண்டு கால அன்பு. திமுகவின் மாநாட்டால் சிறுகனூர் பெருகனூராக மாற்றியுள்ளது. 3 மாதங்களாக திமுக மாநாடுகளை நடத்தி தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளோம். கிரிக்கெட்டில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெறுவது போல தேர்தலில் வெற்றி பெற போகிறோம் திருச்சி என்றாலே திருப்பம்தான். திமுக தொடர்ந்து ஆட்சி செய்ய வேண்டும் என்ற உறுதியை இந்த மாநாட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.தமிழ்நடு நம்மை நம்பித்தான் உள்ளது; நாமும் தமிழ்நாட்டை நம்பித்தான் உள்ளோம்” இவ்வாறு அவர் பேசி வருகிறார் .
