திருச்சி,
திருச்சியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அந்த மாணவியை வாலிபர் ஒருவர் காதலித்து வந்தார். இது பற்றி அறிந்த பெற்றோர் மாணவியை கண்டித்தனர்.
இதையடுத்து அந்த வாலிபர் மாணவியை சமயபுரம் கோவிலுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் மகளிர் போலீசார் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சக்தி (27) என்ற வாலிபர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.
