பைக்கில் 6 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

நெல்லை மாநகரம் மேலப்பாளையம், அண்ணாநகர் சந்திப்பு பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு பணியில் காவல் துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த தேவகுமார் (வயது 35) என்பவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 6.075 கிலோகிராம் எடையுடைய புகையிலை பொருட்கள் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதனை தொடர்ந்து மேலப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Source link