திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்ற விவகாரம்: பிரபல இயக்குனர் கூறியது என்ன?

தவெக தலைவரும் நடிகருமான விஜய்யிடம் இருந்து அவரது மனைவி விவாகரத்து கோரியிருப்பது சினிமா துறையில் மட்டும் இல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. விவாகரத்து பரபரப்புக்கு நடுவே விஜய், திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷாவுடன் ஒன்றாக வந்து பங்கேற்றார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப்பொருளாகியுள்ளது. விஜய்யின் செயல்பாட்டை விமர்சித்தும், அவருக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்தி திரையுலகைச் சேர்ந்த இயக்குனரும் பட தயாரிப்பாளருமான விக்ரம் பட் இவ்விவகாரம் தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், நடிகர்களின் தனிப்பட்ட முடிவுகளை வைத்து அவர்களை விமர்சிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். நடிகர்களின் பணியை வைத்து மட்டுமே அவர்களை மதிப்பிட வேண்டும்; அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது சரியல்ல என்று தெரிவித்துள்ள விக்ரம் பட், அவர்களின் திரைப்படங்கள் நமக்குச் சொந்தமானவை. ஆனால் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை நமக்குச் சொந்தமானது அல்ல,” என்று பதிவிட்டுள்ளார்.

பாலிவுட் சினிமாவின் பிரபல இயக்குனரான விக்ரம் பட் ‘ராஸ்’, ‘குலாம்’, ‘புட்பாத்’, ‘1920’ போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், ஏராளமான திரைப்படங்களுக்கு திரைக்கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் பல படங்களை தயாரித்தும் உள்ளார்.

Source link