சென்னை,
இந்திய அணி 2026 டி20 உலகக் கோப்பையை வென்றதில் மிக முக்கியப் பங்காற்றியவர் சஞ்சு சாம்சன். தொடர் நாயகன் விருது வென்று அசத்திய இவர், தனது வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த தனது மனைவிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பதிவு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதனுடன்,
“நான் உன்னைச் சந்தித்த நாள் முதல் என் வாழ்வின் இந்த நாள் வரை, எனக்குத் துணையாக இருந்ததற்கு மிகவும் நன்றி. வெளிவுலகிற்கு நான் எப்படிப்பட்டவனாக இருந்தாலும், என்னை நானாகவே காதலித்து, என்னிடம் முற்றிலும் நேர்மையாகவும் உண்மையாகவும் நடந்துகொண்டாய்.
எனது சிறந்த தருணங்களையும், எனது மோசமான தருணங்களையும் நீ பார்த்திருக்கிறாய். எல்லாவற்றிலும் எனக்கு உறுதுணையாக நின்றாய். என் வாழ்க்கையில் கிரிக்கெட் எவ்வளவு முக்கியமானது என்பதைப் புரிந்துகொண்டு, அதை உனக்கானதாகவும் மாற்றிக்கொண்டதற்கு நன்றி. இந்தத் தருணத்திற்காக நான் எந்த அளவுக்கு ஆசைப்பட்டேனோ, அதே தீவிரத்துடனும் ஆர்வத்துடனும் நீயும் எனக்காகக் கனவு கண்டாய். மிக்க நன்றி என் அன்பான பொண்டாட்டி” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
