திருமணம் முடிந்த சில நாட்களில்… படப்பிடிப்புக்கு தயாரான விஜய் தேவரகொண்டா

நட்சத்திர காதல் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவகரொண்டா- ராஷ்மிகா திருமணம் கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது. கடந்த ஒரு மாதங்களாக திருமண ஏற்பாடுகளில் பிசியாக இருந்த விஜய் தேவரகொண்டா, சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் இருந்தார். வாழ்வின் புதிய அத்தியாத்தை விரோஷ் ஜோடி தொடங்கியுள்ள நிலையில், மீண்டும் தனது பட வேலைகளை தொடங்க விஜய் தேவரொண்டா ஆயத்தமாகியுள்ளார்.

தற்போது மனைவி ராஷ்மிகாவுடன் இணைந்து ‘ரணபாலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த பான்-இந்தியா படத்தை ராகுல் சங்க்ரித்யன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்தின் சில பகுதிகளின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், இந்த வாரம் முதல் கர்னூலில் புதிய கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த மாதம் 12ஆம் தேதி விஜய் தேவரகொண்டா படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

1854 முதல் 1878 வரை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகிறது. ராயலசீமா பின்னணியில் நடைபெறும் இந்த காலக்கட்ட ஆக்ஷன் கதையில் விஜய் தேவரகொண்டா போர்வீரராக நடித்துள்ளார். ராஷ்மிகா, அவரது மனைவி ஜெயம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு அஜய்-அதுல் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Source link