ஆர்யாவின் 40வது திரைப்படத்தில் 2 நாயகிகள்

ஆர்யா வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். நான் கடவுள், மதராச பட்டினம், அவன் இவன், இரண்டாம் உலகம், மகாமுனி, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்கள் ஆர்யா திறமையான நடிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் ‘வேட்டுவம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து ‘சர்பட்டா’ இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.

இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் தன் 40-வது திரைப்படத்திற்காக ஆர்யா தயாராகி வருகிறார். இதில், நாயகிகளாக நடிகைகள் நிகிலா விமலும் வைஷ்ணவி சைதன்யாவும் நடிக்கின்றனர். நிகில் முரளி தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜை கடந்த டிசம்பரிர் 12ம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், உடற்பயிற்சி கூடத்தில் நடிகைகள் இருவருடனும் ஆர்யா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு கவனம் பெற்றுள்ளது.

Source link