எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு: ஓட்டல் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அழைப்பு

சென்னை,

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டல் சேவைகள் பெருமளவில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல முன்னணி ஓட்டல்களிலும் இன்று ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், இன்றுடன் கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அதன் உரிமையாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பல டீலர்கள் நேற்று முதலே உணவு விநியோகத்தை நிறுத்திவிட்டதாக ஓட்டல் உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் மோடி மற்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த நிலையில், கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்த அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. உணவுத்துறை அமைச்சர் தலைமையில் நாளை (புதன்கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சிலிண்டருக்கு மாற்றாக வேறு வழியை கையாளுவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source link