சிலிண்டர் தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய்: நயினார் நாகேந்திரன்

சென்னை,

ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஓட்டல் சேவைகள் பெருமளவில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல முன்னணி ஓட்டல்களும் இன்று ஒரு நாளைக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதால், உடனடியாக விநியோகம் சீரடையாவிட்டால், இன்றுடன் கடையை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதவாது,

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய். சிலிண்டர் வேண்டும் என்றால் நான் தருகிறேன், நானே ஒரு கியாஸ் டீலர். ஹோட்டல்களில் உணவு குறைந்ததற்கும் சிலிண்டர் தட்டுப்பாடுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவுப் பொருட்கள் குறைப்பு என்பதை எதிர்க்கட்சியினர் எழுதிப்போட்டு இருப்பார்கள். தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை; ஊடகங்களில் வெளியான செய்தி வெறும் வதந்தி என்று கூறினார்.

Source link