சென்னை,
டி20 உலகக் கோபை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இதற்கிடையில், போட்டியின்போது ஒரு சிறிய சர்ச்சை ஏற்பட்டது. இந்திய அணி பந்துவீச்சில் இருந்தபோது 11-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் வீசினார். அப்போது கிரீஸில் இருந்த நியூசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல் பந்தை மிட்செல் பவுலர் திசையில் அடித்தார். அந்த பந்தை பிடித்த அர்ஷ்தீப் சிங் மிட்செல் நோக்கி எறிந்தார். பந்து அவரது தொடையில் பட்டதால், மிட்செல் அர்ஷ்தீப்பிடம் எகிறினார்.
உடனே இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் வந்து மிட்செலை அமைதிப்படுத்தினார். அம்பயர்கள் இரு வீரர்களையும் எச்சரித்தனர். போட்டி முடிந்த பின் அர்ஷ்தீப் சிங் மிட்செலிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. இதனால் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
இந்த சம்பவத்திற்கு, அர்ஷ்தீப் சிங்கிற்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. நடத்தை விதிகளை மீறியதாக போட்டி கட்டணத்தில் அர்ஷ்தீப் சிங்கிற்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
