மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் – பிரதமருக்கு டிடிவி தினகரன் நன்றி

சென்னை,

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

Also Read
கல்விப் பெருமையைச் சொல்லும் அறிவுச் சிலையைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி – மு.க.ஸ்டாலின்
கோப்புப்படம்

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த ஒப்புதல் அளித்திருக்கும் மத்திய அமைச்சரவைக்கும் பாரதப் பிரதமர் நரேந்திரமோடிக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read
செல்போன் பார்த்ததை கண்டித்த பெற்றோர்… 12-ம் வகுப்பு மாணவர் எடுத்த விபரீத முடிவு
கோப்புப்படம்

ஆன்மீகம், சுற்றுலா மற்றும் பண்டையகால வரலாற்றுச் சிறப்புகளை உள்ளடக்கிய மதுரைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் வகையிலும், தென் தமிழகத்தின் பொருளாதாரத்தை பெருக்கும் வகையிலும் மதுரை விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை வழங்கியிருக்கும் ஒப்புதலை மனதார வரவேற்று மகிழ்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Source link