ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டது – அமெரிக்கா

வாஷிங்டன்,

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து தொடுத்துள்ள போர் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது.

இந்தநிலையில், ஈரானின் கடற்படை முழுவதுமாக அழிக்கப்பட்டது. ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்க மாட்டார். ஈரான் மீதான தாக்குதல் மிகத்துல்லியமாக நடந்து வருகிறது. ஆபரேஷன் எபிக் பியூரி வெற்றிப்பாதையில் உள்ளது. ஈரானின் ஆயுதக்கிடங்கு தீர்ந்து விட்டது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார்.

ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்க ராணுவம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியுள்ளது. ஆனால் மிக முக்கியமான சில இலக்குகளை இன்னும் தாக்கவில்லை. தேவைப்படும் பட்சத்தில் பின்னர் தாக்குவதற்காக அந்த இலக்குகள் ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளது என டிரம்ப் கூறியுள்ளார்.

Source link