சென்னை,
தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கு நடிகர் விஜய் தீவிரமாக தயாராகி வருகிறார். தவெக என்ற பெயரில் கட்சியை தொடங்கி மாநிலம் முழுவதும் நிர்வாகிகளையும் நியமித்துள்ள விஜய் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதனை தவெக நிர்வாகிகள் மறுத்து உள்ளனர். இதுபோன்ற பரபரப்பான சூழலில் விஜய் இன்று சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்காணலை தொடங்கி உள்ளார். சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு தொகுதிவாரியாக விண்ணப்பித்தவர்களை நேரில் அழைத்து இன்று விஜய் அவர்களிடம் தேர்தலை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்? என்று கேட்டறிந்தார். முதல் கட்டமாக இன்று 60 தொகுதி நிர்வாகிகளை அவர் சந்தித்துள்ளார். தவெக வேட்பாளர்களுக்கான நேர்காணலில், ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்களிடம் விஜய் தனித்தனியாக பேசினார்.
அப்போது, ”பெரம்பூர் தொகுதிக்கு நானே வருவேன்” என தெரிவித்திருக்கிறார்.ஏற்கனவே பெரம்பூரில் விஜய் போட்டியிடுவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
