மாதவனின் ‘லெகசி' வெப் சீரிஸ் – கவனம் ஈர்க்கும் டீசர்

சென்னை,

மாதவன் நடித்துள்ள ‘லெஜஸி’ வெப்சீரிஸின் டீசரை நெட்ப்ளிக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த தொடரில் கவுதம் கார்த்திக், நிமிஷா சஜயன், அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார்.

மாதவனின் வித்தியாசமான கெட்டப் உடன் கூடிய டீசர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரை பார்க்கும்போது அரசியல் கதையாக இருக்குமெனத் தெரிகிறது.

மாதவனின் ‘லெகசி' வெப் சீரிஸ் - கவனம் ஈர்க்கும் டீசர்
தமிழில் வெளியாகும் “சத்தா பச்சா”

அம்மு என்ற தெலுங்கு திரைப்படத்தை இயக்கிய சாருகேஷ் சேகர் இந்தத் தொடரை எழுதி இயக்கியுள்ளார். இந்தத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் நேரடியாக நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Source link