சென்னை,
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற உள்ள டி20 தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன்சி பொறுப்பை மிட்செல் சான்ட்னர் மற்றும் டாம் லாதம் இணைந்து மேற்கொள்ள உள்ளனர்.
ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் மிட்செல் சான்ட்னர் நியூசிலாந்து அணியை வழிநடத்துவார். அதன் பின்னர் கடைசி இரண்டு போட்டிகளில் டெஸ்ட் அணியின் கேப்டன் டாம் லாதம் கேப்டனாக பொறுப்பேற்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்குவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இந்த டி20 தொடர் வருகிற 15ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெறவுள்ளதால் உள்ளூர் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி:
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), காடீன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டேன் கிளீவர் (விக்கெட் கீப்பர்), டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), லாக்கி பெர்க்சன், ஜாக் போல்க்ஸ், பேவான் ஜேகப்ஸ், கைல் ஜேமிசன், நிக் கேலி, டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜெய்டன் லென்க்ஸ், கோல் மெகான்சி, ஜிம்மி நீஷாம், டிம் ராபின்சன், பென் சியர்ஸ், நேதன் ஸ்மித், இஷ் சோசி
