சென்னை,
தமிழகம் , புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அதன்படி, இன்று தொடங்கும் பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.
இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு முன்னாள் முதல்-அமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ செல்வங்கள் அனைவருக்கும் #AllTheBest ,
தேர்வு என்பது உங்கள் அறிவை-உழைப்பை வெளிக்காட்டும் ஒரு சிறு களம் மட்டுமே. Positive Attitude-உடன் எதிர்கொள்ளுங்கள்.
அனைத்து பாட தேர்வுகளிலும் சிறப்பாக செயல்பட்டு , அனைவரும் #All_Pass ஆக, வெற்றி காண வாழ்த்துகிறேன்!
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
