“தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்”- 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து

சென்னை,

தமிழகம் , புதுச்சேரியில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. அதன்படி, இன்று தொடங்கும் பொதுத்தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

“இன்று தொடங்கும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும், எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆண்டு முழுவதும் நீங்கள் எடுத்த உழைப்பும், முயற்சியும் இந்த பொதுத் தேர்வில் நல்ல பலனைக் கொடுக்கும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது. தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். அனைவரும் சிறப்பாக தேர்வு எழுதி, வெற்றி பெற நல்வாழ்த்துகள்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Source link