வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ‘அரசன்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி, கிஷோர், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேங்க்ஸ்டர் கதைகக்களத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
முதற்கட்டமாக கோவில்பட்டி, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சிலம்பரசன் மதுரை டைகர் என்ற கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் சமீபத்தில் இணையத்தில் பரவி வைரலாகின.
இந்த நிலையில், அரசன் படத்தில் புதிய பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் விக்ராந்த் மற்றும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் மூலம் கவனம் ஈர்த்த சிறுவன், கமலேஷும் இப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் மார்ச் 16 -ல் சென்னையில் நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது.
