’ஐபிஎல்’ தொடக்கப் போட்டி…பஞ்சாப் இல்லை, ஆர்.சி.பியுடன் மோதும் அணி இதுவா?

சென்னை,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ஐபிஎல் தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வரும் 12ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், ஐபிஎல் தொடரின் முதல் போட்டி குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி ரன்னர்-அப் ஆன பஞ்சாப் அணியுடன் மோதும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தொடக்கப் போட்டியில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முதல் இரண்டு நாட்களில் ஆர்.சி.பி., சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளின் போட்டிகளை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read
பஸ் டிரைவரிலிருந்து உலகக் கோப்பை வெற்றிவரை… இந்திய அணியின் ‘அன்சீன் ஹீரோ’
’ஐபிஎல்’ தொடக்கப் போட்டி...பஞ்சாப் இல்லை, ஆர்.சி.பியுடன் மோதும் அணி இதுவா?

மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், இரண்டு அணிகளின் நிர்வாகங்களிடமிருந்தும் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. 29ம் தேதி பஞ்சாப் அணி முல்லான்பூரில் குஜராத்துடன் மோத வாய்ப்பு எனவும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு முதற்கட்டமாக 20 நாட்களுக்கான போட்டி அட்டவணை மட்டும் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீதமுள்ள அட்டவணை வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Source link