ஐதராபாத்,
பெண்கள் உலகக் கோப்பை ஆக்கி போட்டி பெல்ஜியம் மற்றும் நெதர் லாந்தில் ஆகஸ்டு மாதம் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப் பட்டு தங்களுக்குள் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவி லும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த போட்டியில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும்.
இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி தனது 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று வேல்சை (இரவு 7.30 மணி) சந்திக்கிறது. முதலாவது ஆட்டத்தில் உருகுவேயை தோற்கடித்த இந்திய அணி, அடுத்த ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் ‘டிரா’ செய்தது.
