ரசிகர்களின் அன்பு தான் எனது சொத்து – ஹிப் ஹாப் ஆதி

சென்னை,

இசையமைப்பாளர், நடிகர், பாடகர் எனப் பன்முகம் கொண்டவர் ஹிப் ஹாப் ஆதி. உலக நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் அவர், சமீபத்தில் கூட டார்க் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். தற்போது ‘மீசைய முறுக்கு – 2’ படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

Also Read
4 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது… கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா
கோப்புப்படம்

இந்த நிலையில் சில காலம் இசை நிகழ்ச்சிகளுக்கு ஓய்வு தந்துவிட்டு, நடிப்பு மற்றும் பாடலில் கவனம் செலுத்தப் போவதாக ஹிப் ஹாப் ஆதி அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறும்போது, “என் திரைப்பயணத்தில் ரசிகர்களின் பாராட்டையும், அன்பையும் தான் மிகப்பெரிய விருதுகளாக பார்க்கிறேன்.

Also Read
திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு
கோப்புப்படம்

நான் பெரிதாக சேர்த்து வைத்த சொத்தாக ரசிகர்களின் அன்பைத்தான் பார்க்கிறேன். அந்த ரசிகர்களை மகிழ்விக்க இனி படங்களில் கவனம் செலுத்தப் போகிறேன்” என்று கூறியுள்ளார்.

Source link