பெண்களிடம் மோசமாக நடந்து கொள்பவர்களுக்கு சமூகத்தில் பயத்தை ஏற்படுத்த வேண்டும்: நடிகை ரம்யா

பெங்களூரு,

தனக்கு எதிரான ஆபாச குறுஞ்செய்தி, பாலியல் மிரட்டல் வழக்கு தொடர் பான விசாரணைக்கு நடிகை ரம்யா பெங்களூரு 42-வது செசன்சு கோர்ட் டில் ஆஜரானார். நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.

அதன் பிறகு நடிகை ரம்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் கொடுத்த வழக்கில் வாக்குமூலம் அளித்துள்ளேன். குற்றம்சாட்டப்பட்டவர்களை பார்ப்பது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஆனால் இது எனது தனிப்பட்ட நோக்கத்திற்காக தொடரப்பட்ட வழக்கு அல்ல. பெண்களி டம் மோசமாக நடந்து கொள்பவர்களுக்கு சமூகத்தில் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கை தொடர்ந்துள்ளேன்.

குழந்தைகள் உள்பட பெண்களுக்கு எதிராக ஆபாசமாக கருத்துகளை தெரிவிப்பது என்பது பொதுவான விஷயம் அல்ல. இதுபோன்ற சம்பவங்களை அடிப்படையிலேயே தடுக்க வேண்டும். தடுக்காமல் விட்டால் எதிர்காலத்திலும் இதுபோன்ற செயல்கள் தொடரும். எனவே அனைத்து சிறுமிகள், பெண்கள் சார்பாக இந்த வழக்கை நான் தொடர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source link